தமிழ் நாட்டில்  யார் ஆட்சி காலத்தில்   மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைத்தது   பொதுமேடையில் விவாதிக்க  நாங்கள் ரெடி நீங்க ரெடியா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்..

தமிழ் நாட்டில்  யார் ஆட்சி காலத்தில்   மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைத்தது   பொதுமேடையில் விவாதிக்க  நாங்கள் ரெடி நீங்க ரெடியா
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்..



சிவகாசி மாவட்டம்  திருத்தங்கல்லில் நகர கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவனேசன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு  சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பேசுகையில்.


தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றனர். ஏழைஎளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. சிவகாசி ஒன்றியத்தில் இன்னும் ஒருசில நாட்களில்  சீவலப்பேரி குடிநீரை திறந்து வைக்க உள்ளோம். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருத்தங்கல் நகராட்சிக்கு ஏற்கனவே மானுா் குடிநீரை நாங்கள்தான் கொண்டு வந்தோம். தற்போது கூடுதலாக புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தங்கல் நகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் தள்ளுவண்டியில் பெண்களும் ஆண்களும் இரவுபகல் பார்க்காமல் தண்ணீரை வெகுதூரத்தில் இருந்து சுமந்து வந்தனர். தற்போது அந்த நிலை இல்லை. பொதுமக்கள் மனசாட்சிப்படி சிந்திக்க வேண்டும். திருத்தங்கல் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார் என்று நினைத்து பார்க்கவேண்டும். தற்போது நகராட்சிக்கு தேர்தல் வரஉள்ளது. தேர்தல் வந்தவுடன் சிலர் வேஷ்டி கட்டிக் கொண்டு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று பொய்சொல்லி ஓட்டு கேட்பாா்கள். திமுக ஆட்சிக்காலத்தில் திருத்தங்கல் நகராட்சிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. குடிநீர் மேல்நிலை தொட்டி, வாறுகால், சாலை வசதிகள், புதிய பஸ் ஸ்டாணட்டு, அரசு மருத்துவமனை உட்பட அனைத்து திட்டங்களும் செய்து கொடுத்தது அதிமுக ஆட்சிதான்.  ஆகவே மக்களிடத்தில் ஓட்டு கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. ஓட்டு போடக் கூடிய கடமையும் உங்களுக்கு உள்ளது. சில நேரங்களில் எங்கள் கரகங்களை தட்டிவிட்டுக்கூட நீங்கள் இருந்திருக்கலாம். எங்களை கண்டித்து இருக்கலாம். நாங்கள் உங்களுக்காக உழைக்க கூடியவர்கள். நீங்கள் எங்களை விரட்டினாலும் நாங்கள் உங்கள் வீடு தேடிவந்து உங்கள் பிரச்சினைக்காக பாடுபடுவோம். அந்த அளவிற்கு மக்கள் சேவை செய்பவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். எம்ஜிஆர், ஜெயலிதாவின் வழிவந்தவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். முருகன் காலனி, கக்கன் காலனி போன்ற பகுதிகள் எல்லாம் ஒரு காலத்தில் எப்படி இருந்தது. தற்போது அங்கு எப்படி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுவாங்க திமுகவினர் நினைக்கின்றனர். நாங்கள் பாட்டு எழுதி பேர் வாங்குகின்றோம். திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கி விடுகின்றனர். எனவே நாட்டு மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். தேர்தல் வந்தவுடன் திமுகவினர் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். மக்கள் நலத்திட்டங்கள் யார் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்று திமுகவோடு பொதுமேடையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். எங்களிடத்தில் நீங்கள் பொறுமையோடு பழகலாம் பேசலாம் உங்களுக்காக உழைக்கின்ற எங்களுக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவு கொடுங்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வர மட்டோம். எப்பொழுதும் உங்களோடுதான் இருந்து பணியாற்றி வருகின்றோம். மக்களோடு மக்களாகத்தான் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இன்று ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு அதிமுக அரசு வழங்கியுள்ளது. இந்த பொங்கல் பரிசுகூட அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் தேடிதேடிச் சென்று வாங்கி கொடுத்தார்கள். திருத்தங்கல் நகராட்சியை அண்ணா திமுக மீண்டும் கைப்பற்றியது என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கி கொடுங்கள். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சிக்கு நீங்கள் ஆதாரவு கொடுங்கள் என்று பேசினார்.  கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வல்லிக்கண்ணன் கட்சி நிர்வாகிகள் சாந்திசிவனேசன், அ.செல்வம், சேதுராமன், ரவிசெல்வம், வசந்தகுமார், வசந்திசேதுராமன், சித்ராசுரேஷ், ராதாமுருகன், நாகராஜ், தங்கராஜ், ராமர், தம்பித்துரை, முனியசாமி, முத்துக்குமரன், குருவையா, மாரீஸ்வரி, ஜோதிலட்சுமி, முனியம்மாள், சுப்புராம், மாதவன், பாலகிருஷ்ணன், முருகன், அப்பாத்துரை, விமல், ஹரிஹரசுதன், மணிமாறன், மாதவன், தம்பிராஜ், ராசுபாலமுருகன், ரோசம்ம்மாள், முத்துராஜ், கருப்பசாமி, வாழவந்தான், சேகர், ஜெயக்கொடி, சிவபாரதி, மாரியப்பன், கண்ணன், சுரேஷ், மாரியப்பன், பாண்டியராஜ், காளியப்பன், சேது, முருகன் மற்றும் தகவல் தொழில்நுட்பட மாவட்ட தலைவர் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட கட்சிந நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத்தலைவர் கோவில்பிள்ளை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் முருகன், காளிராஜன், சசிகுமார் நன்றி கூறினர் கூட்ட ஏற்பாடுகளை திருத்தங்கல் நகர கழக செயலாளர் பொன்சக்திவேல் சிறப்பாக செய்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


tamilsudarr.page


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image