வாணியம்பாடியில் காவல் துறை மற்றும் தேசிய மாணவர்கள் படை மாணவர்களிடையே நட்பை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நட்பைஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு காவல் துறை பணிகள் அதில் மாணவர்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் கருத்தரங்கு கடந்த வாரம் நடைபெற்றது.அதே போல் இன்று இந்து மேல்நிலை பள்ளி தேசிய மாணவர்படை மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்வாணியம்பாடி நகர காவல்நிலையம் வந்தனர் பின்னர் அவர்களுடன் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான நடைபெற்ற காவல் துறை மாணவர் கருத்தரங்கில் மாணவர்களுக்கு காவல்துறை பற்றிய பணிகள் குறித்தும் தேசிய மாணவர்கள் படை மாணவர்கள் காவல்துறையினருடன் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை காவல் துறையினர் வழங்கினர்.