சென்னையில் கிரிக்கெட் விளையாடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட் வீரரை போல் வெள்ளை நிற பேண்ட், சர்ட், தொப்பி அணிந்துகொண்டு கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பந்தை வீச முதல்வர் அதை லாவகமாக அடித்து விளாசினார். அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இந்த போட்டி குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். மன அழுத்தத்தை போக்க விளையாட்டு அவசியமானதொன்று என்று தெரிவித்தார். முதல்வர் கிரிக்கெட் விளையாடியதை அங்கிருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கை தட்டி உற்சாகப்படுத்தினர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் உதயக்குமார் உள்ளிட்டோர் அவ்வப்போது பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கும்போது அந்த விளையாட்டுகளை விளையாடி தொடங்கி வைப்பது வழக்கம். அது போல் முதல்வரும் கிரிக்கெட் போட்டியை விளையாடி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.