சுடுகாடு வசதி கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட செருவுகிந்தனப்பள்ளி, பட்டுவெள்ளையூர், போயர் வட்டம் போன்ற பகுதிகளில் உள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரியும், குறிப்பாக சுடுகாட்டிற்கு செல்லும் மயானப்பாதை மற்றும் சுடுகாட்டை சுற்றி தடுப்புவேலி அமைத்து தரக்கோரி பலமுறை வட்டாட்சியர் இடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்படும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முறைக்கேடுகள், குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கள்ளச்சாராய விற்பனை, திருப்பத்தூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாலாற்றில் திருடப்படும் மணலை தடுக்க வருவாய்த் துறையும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சுடுகாடு பிரச்சனைக்கு தீர்வு கான மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, மாவட்ட துணை செயலாளர் நந்தி, நகர துணை செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.