கந்திலி ஒன்றியத்தில் மக்களைத் தேடி பாமக வீடு வீடாகச் சென்று செயல் திட்ட அறிக்கை வழங்கிய நிர்வாகிகள்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களை தேடி பாட்டாளி மக்கள் கட்சி என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வீடுகளாக கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாமகவினர். பாமகவின் செயல் திட்ட அறிக்கையான அனைவருக்கும் முறையான குடிநீர், இலவச கட்டாய கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் இருபது லட்ச ரூபாய் வைப்பு நிதி, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான சுகாதாரம் போன்ற செயல் அறிக்கையை கொண்ட துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்..