பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து. ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து. ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது.  4சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் நால்ரோடு கிராமம் அமைந்துள்ளது. இதில் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் பயணிக்கின்றன. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நால்ரோடு பகுதியில் உள்ள 4 ரோடுகள் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நேற்று சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு லாரி நால்ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளதால் நான்கு ரோடுகள் சந்திக்குமிடத்தில் சாலையை மேம்படுத்தி ரவுண்டானா அமைக்க உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image