கீரனூர் அருகே களமாவூர் ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி கொலை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் ஜாமீனில் வெளியே வந்த மூர்த்தி (50) வெட்டி கொலை கீரனூர் போலீஸ் விசாரணை.
கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முத்து, வீராச்சாமி தந்தை, மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
தற்போது போது ஜாமீனில் வந்த மூர்த்தி காலையில் டீ கடையில் உட்கார்ந்து இருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கு குறித்து கீரனூர் போலீஸ் விசாரணை.