மானாமதுரையில் எமன் சிவன் வேடமிட்டு தலைகவசம் பற்றிய பிரச்சாரம்..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடக கலைஞர்களை வைத்து சிவன்,சித்திரகுப்தன் மற்றும் எமதர்மன் போன்ற வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதின் நன்மை குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்
மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு, தலைகவசம் அவசியம் குறித்து மானாமதுரை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.