ஆம்பூரில் செல்போன் திருடனை விரட்டி பிடித்த காவல்துறை ஒரு கிலோ மீட்டர் தூரம் திருடனுடன் வேகமாக ஓடி மடக்கிப் பிடித்த காவலர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் குடியாத்தம் அடுத்த கல்மடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பேர்ணம்பட்டு பத்திரபல்லி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் செல்போனில் பேசி விட்டு தருவதாக பெற்றுக்கொண்டு திடீரென்று தப்பியுள்ளார் பின்னர் செல்போனை பறிகொடுத்த சிறுவன் தினேஷ் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன்பேரில் ஆம்பூர் நகர பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் சிறுவன் தினேஷின் செல்போன் எண்ணை பயன்படுத்திவந்த தமிழ்ச்செல்வன் போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் தினேஷ் தமிழ்ச்செல்வன் இடம் செல்போனில் பேசி ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார் அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளார் அதைத்தொடர்ந்து செல்போன் திருடன் தமிழ் செல்வனை செல் போனை கொடுக்க முற்படும் போது அங்கு மறைந்திருந்த காவலர் சுரேந்திர குமார் என்பவர் பிடிக்க முயன்றபோது செல்போனில் செல்போனை வீசிவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து மின்னல் வேகத்தில் காவலரை கண்டு தப்பினார் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வேகமாக பின்தொடர்ந்தது விரட்டி சென்று ஆம்பூர் நகர்பகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இருந்து ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மேலும் காவலர்களை அனுப்பி பல்வேறு சாலைகள் வழியாக ஓடுவதை கேமரா மூலம் கண்காணித்து இருந்து செல்போன் மூலம் காவலர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து நேதாஜி சாலை அருகே தனியார் லாரி செட் உள்ளே நுழைய முற்படும்போது காவலர் சுரேந்திர குமார் மற்றும் ஏழுமலை ஆகியோர் செல்போன் திருடனை மடக்கிப் பிடித்தனர் பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் செல்போன் திருடிக்கொண்டு ஓடிய சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.