திருப்பத்தூர் அருகே புதிய துணை மின்நிலையங்களை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் அருகே புதிய துணை மின்நிலையங்களை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம்  கந்திலி ஊராட்சி ஒன்றியம்  குனிச்சி மற்றும் புதூர் நாடு  பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று  தமிழ் நாடு மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகம் சார்பில் 6கோடியே 84 லட்சம் மதிப்பிட்டில்  புதிதாக 33/ 11கிலோ வோட் துணை நிலையங்கள்  துவக்க விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 


இவ்விழாவில்    மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசுகையில். 


 திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 துணை மின் நிலையங்கள் இன்று துவக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்ட மக்களின் அனைத்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. புதூர்நாடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான  சாலை வசதி  பணி கூடிய விரைவில்  மேற்கொள்ளப்படும் மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் அப்பணி நடைபெறும் என பேசினார்.


 இவ்விழாவில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், திருப்பத்தூர் நகர கழகம் செயளாளரும் மற்றும் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர்  டி.டி.குமார் திருப்பத்தூர் ஒன்றிய செயளாளர் செல்வம் வேலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயளாளர் சாமிகண்ணு  மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாமளா மேரி, பொது மேற்பார்வையாளர் ராணி, செயற் பொறியாளர் திருப்பத்தூர் கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் அருண்பாண்டியன், இளம்நிலை பொறியாளர் ஏகாம்பரம், முகவர் சிவசீலன் உட்பட மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image