அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழித்த வரலாறு உண்டு என திருப்பத்தூரில் அமைச்சர் வீரமணி ஆவேசம்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் நகர செயளாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழா நடைப்பெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில்.
அதிமுக என்ற கட்சியில் இருப்பதே நமக்கும் எல்லாம் பெருமை. இந்த உலகம் உள்ள வரை அதிமுகவின் புகழ் எப்போதும் இருக்கும் குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100நாட்கள் 200நாட்களில் இந்த கட்சி கலைந்து விடும் என்று கூறினார். அது போலவே இன்று அவரது மகன் ஸ்டாலின் நமது முதல்வரை பார்த்து தினமும் எடப்பாடி. பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என அப்பா போலவே பிள்ளையும் கூறி வருகிறார். மேலும் இன்று நடிகர் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறார்கள் முதலில் எம்ஜிஆரின் படத்தை பார்த்து விட்டு வந்து முதல்வராக ஆசைப்பட வேண்டும்.
திமுக கட்சியை தீய சக்தி என கூறிய எம்ஜிஆர் அவர் உருவாக்கிய அதிமுகவை இன்று தினகரன் திமுகவோடு கை கோர்த்து கொண்டு கட்சியும் ஆட்சியும் அழிக்க நினைக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய எஃகு கோட்டை ஒருபோதும் அழிக்க முடியாது அழிக்க நினைத்தவர்கள் தான் அழித்து போன வரலாறு உண்டு என பேசினார். இவ்விழாவில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் அமுதா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தம்பா கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கந்திலி ரமேஷ், ஜோலார்பேட்டை ரமேஷ், திருப்பத்தூர் செல்வம், நாட்டறம்பள்ளி ராஜா, வாணியம்பாடி கோவி. சம்பத் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
tamilsudarr.page
செய்தி.கோவி.சரவணன்...