செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி கலையரங்க கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.







செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி கலையரங்க கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது---

 

 செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி கலையரங்க கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். 

 

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள்,  திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 230 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவை பிறப்பித்தார்.

 

இக்கூட்டரங்கில் மதுராந்தகம் கோட்டம் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 9 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண தொகை ரூ.7,50,000 மதிப்பிலான காசோலையும்,  செய்யூர் வட்டம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், ஊனமுற்றோர் உதவித்தொகையும்விதவை உதவித்தொகையும், மதுராந்தகம் வட்டம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும்,விதவை உதவித்தொகையும்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் வழங்கினார்.

 

மேலும் செங்கல்பட்டு வட்டாட்சியர் சங்கர் கொடி நாள் நிதி வசூல் தொகையாக ரூ.20,000/-க்கான வரையோலயை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் அவர்களிடம் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட  வருவாய் அலுவலர்  க.பிரியா,  மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(பொது)  விஜயகுமாரி மற்றும் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம்,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.








Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image