கரூர் ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..
கரூர் ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ், சேலம் கோட்டை மேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முன்னதாக தனியார் வங்கி ஏடிஎம் மற்றும் கரூர் வைசியா வங்கி சார்பில் ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்ட பேட்டரி காரை ஜான்தாமஸ் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்,
கரூரில் இருந்து சென்னைக்கு புதிய பகல் நேர ரயில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கரூரில் குட்ஷெட் அமைக்க கோரிக்கை வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் முதல் சென்னை எக்மோர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை கரூர் வழியாக இயக்குவதற்கு வாய்ப்பில்லை.
திருச்சி - பாலக்காடு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள எல்இடி தகவல் பலகை வைத்ததில் முறைகேடு இருப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ரயில் நிலைய ஆய்வுக்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் இடம் கரூர் எம்பி ஜோதிமணி மனு ஒன்றை அளித்தார். அதில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் கரூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே குகை வழிப்பாதைகள் திட்டமிடாமல் கட்டப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக உள்ளததை சரி செய்தல் வேண்டும். கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் 
கொடுத்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்...