ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார்.

ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார்.


கோவை:-


நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராமன் சீதை குறித்து பேசுகையில் பெரியார் குறித்தும் அவர் நடத்திய ஊர்வலம் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ரஜினிகாந்தின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது தொடர்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உயிரோடு இருக்க மாட்டார் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


இதன் காரணமாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ரஜினிகாந்த் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் ரெட்பிக்ஸ் இணைய தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image