குன்னூர் அருகே ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய   யானைகள் பொதுமக்கள் கடும் அவதி.

குன்னூர் அருகே ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய   யானைகள் பொதுமக்கள் கடும் அவதி.


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  கிரேக்க மோர் தேயிலை எஸ்டேட் பகுதிகளில்   அரசுக்கு சொந்தமான  பொது வினியோக ரேசன் கடை மற்றும்  மளிகை கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான  அரிசி,பருப்பு சக்கரை உட்பட  சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான  பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீடீரென அப்பகுதிக்கு 1குட்டி யானையுடன் படையெடுத்த 5 காட்டு யானைகள் சக்கரையின் வாசனையின் காரணமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வைக்கப்பட்டு இருந்த ரேசன் கடை மற்றும் மாளிகை கடைகளை  சூறையாடின இதில்  2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தின. இதனால்  இன்று  விடுமுறை தினம் என்பதால் ரேசன் பொருட்களை வாங்க வந்த பொது மக்கள் பெரும்  அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மழை காலம் என்பதாலும்  பசுமையான சூழல் உள்ளதாலும் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கின்றன.‌ பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் காட்டு‌ யானைகள் அடிக்கடி வருவதால்  வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image