திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.
திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி செய்துள்ளனர் என குற்றம் சாடினார். ஆளுங்கட்சினர், அதிகாரிகளின் தவறுகளை மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார் எனவும் கூறினார்.