தஞ்சாவூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப  பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்  பேரணி ..

 









தஞ்சாவூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப  பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்  பேரணி ..

 

      மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும். தமிழகத்தில் இந்த சட்டங்கள்

நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

 

        இந்த பேரணி  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. பேரணி டேண்டக்ஸ் ரவுண்டானா சென்றதும்  போலீசார் தடுத்து நிறுத்தினர்.பேரணியில் பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் முஸ்லிம்கள் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.பேரணிக்கு மாவட்ட தலைவர் கே.ராஜிக்முகமது தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேரணி முடிவில் மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் பேசினார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முகமது பாரூக் நன்றி கூறினார் பின்னர் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி  (பொறுப்பு) வகிக்கும் கதிரேசனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியை ஒட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்..

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்.

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.









 


 

Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image