அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சராகலாம். அது  தி.மு.க.வில் முடியுமா. முதல்வர் கேள்வி..‌


அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சராகலாம். அது  தி.மு.க.வில் முடியுமா. முதல்வர் கேள்வி..‌


சேலம் : முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் ன் 103 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில்  நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சிறப்புரையாற்றினார்.


அவர் பேசிய அவர்.


மிட்டா மிராசுதாரர், பணம்படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் மட்டுமே உயர்பதவி வகித்து வந்த நிலையை  எம்.ஜி.ஆர் அதை  மாற்றி சாதாரண மனிதரும், சட்டமன்ற உறுப்பினர் போன்ற பல்வேறு உயர்பதவி வகிக்க காரணமானவர். எம்.ஜி.ஆர் நடித்த படங்கள், பாடல்கள் அனைத்தும் இளைஞர்களை நல்வழிபடுத்தும் வகையிலும், தேச பற்றையும், ஒழுக்கத்தையும் எடுத்துரைக்கும் அளவில் இருந்தது. ஆனால், சமீபமாக வெளியாகி வரும் திரைபடங்கள் இளைஞர்களை சீர்கெடுக்கும் அளவில் அமைந்துள்ளது.


எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சி உடைந்து, மறைந்துவிடும் என்று கருணாநிதி கனவு கண்டார். ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் எம்.ஜி.ஆர். வழியில் சிறப்பாக வழி  நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.


அடுத்தடுத்த காலகட்டத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் தொடர்ந்து பகல்  கனவு கண்டு வருகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் நான் ஒருவன் மட்டும் முதலமைச்சர் அல்ல. இங்கு அடிமட்ட  தொண்டர்கள் முதல்  அனைவரும் முதலமைச்சர்கள்தான். 30 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று எதிர் கட்சி தலைவர்  ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். ஆனால்


அ.தி.மு.க.வில் சாதாரண  தொண்டன்   விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான்‌ முதலமைச்சராக வர முடியும். ஆனால்  தி.மு.க.வில் கலைஞர், அவருக்கு பிறகு ஸ்டாலினும், அதற்கு பிறகு உதயநிதிக்கு என  முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று வாரிசு அரசியலை நடத்தி வருகின்றனர். தி.மு.க. தொண்டர்கள் வாழ் நாள் முழுவதும் கட்சிக்காக  உழைப்பதை தவிற வேறு எதையும் பார்த்திட முடியாது.


நாட்டு மக்களை எப்படி ஏமாற்றலாம் என்ற வித்தையுடன், பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலில் திமுக  வெற்றி பெற்றது.
அதன்பிறகு நடைபெற்ற இடைதேர்தல்களில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. மக்கள் கடந்த தேர்தலை கணக்கிட்டு பிரித்து வாக்களித்தனர்.  அ.தி.மு.க. நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளோடு, இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலைவிட அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது.


காரியம் நடைபெற வேண்டும் என்றால் காலை பிடிப்பதும், காரியம் கிடைக்கவில்லை என்றால் காலைவாறும் குணம் கொண்டது தான் தி.மு.க. 100 ஆண்டு காலம்  இந்தியாவில் வரலாற்றில்  காங்கிரஸ் கட்சி என்பது வாக்கு வங்கி இல்லாத கட்சி என்று கூட்டணியில் உள்ள காங்கிரசை துரைமுருகன் விமர்சித்துள்ளார். கூட்டணி கட்சிகளைக்கூட உதாசினப்படுத்தும் தி.மு.க.வினர், அந்த கூட்டணியில் பங்குவகிக்கும் காங்கிரஸ் கட்சியை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளனர்.


தற்போதைய ஆட்சியில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகையான திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம்தான் ரூ. 7 ஆயிரம் கோடி பயிர் இழப்பீட்டை பெற்று தந்துள்ளது. அதேபோல, ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் 100 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா அமைய உள்ளது. அதற்கான அடிக்கல்நாட்டு விழா தலைவாசலில் அடுத்த மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது.


அ.தி.மு.க. ஆட்சி நடைமுறைக்கேற்ப விஞ்ஞான முறையில் நடைபெற்று வருவதை ஸ்டாலின் உணரவேண்டும். ஒரு ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து மக்களுக்கு தொண்டாற்றி வருவது அ.தி.மு.க. ஆட்சி. 13 ஆண்டுகாலம் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க., தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. எந்த தொழிற்சாலையையும் அமைக்கவில்லை.


கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததோடு, நூற்றுக்கணக்காண பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 43,584 காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி கல்வியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஏராளமான திட்டங்கள் செயல்பட்டு வருவது ஸ்டாலினுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர் தலைவராக இருக்கவே தகுதியற்றவர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் கூலிப்படையால் வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டப்பட்டார். அப்போது, அவ்வழியாக சென்ற தி.மு.க. அமைச்சர்கள், சிறு உதவி கூட செய்ய தயங்கிவர்கள் தான் தி.மு.க.வினர்.


தூத்துகுடியில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை மற்றும் செல்போன் உதிரிபாகம், கார் உற்பத்தி ஆலை என பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ளனர். அதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


தேசிய மக்கள் பதிவேடு குறித்து சிறுபான்மை மக்களிடத்தில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. 2011-ல் இருந்ததை போன்று தான், தற்போதும் தேசிய பதிவேடு கணக்கிடப்பட உள்ளது. அதில், ஆதார் மற்றும் மொபைல் எண்கள் மட்டுமே கூடுதலாக பெறப்படுகிறது. எனவே, சிறுபான்மை மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலர்களாக எப்போதும் அதிமுக துணை நிற்கும் நான் அதை எ உறுதியாக கூறுகிறேன் என பேசினார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்..


செய்தி பிரிவு..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image