தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சி விருதுநகரில் பொதுகூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி..
விருதுநகர் : முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆன்மிக ஆட்சியை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கேடி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஏழைகளுக்கான ஆட்சி. அம்பானி பேரப்பிள்ளைகளுக்கான ஆட்சி இல்லை. பசியோடு இருந்த ஏழைகள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் அண்ணா தி.மு.க. ஏழைகள் இல்லா உலகத்தை உருவாக்க பல நல்ல திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்துள்ளார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த இ.பி.எஸ். ஓ.பி.எஸ்.ஸும் ஏழைகளுக்கான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக நீக்குவதற்கு, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 500 கோடி செலவில் கொண்டு வந்துள்ளோம். எங்களைப்போல் ஏழைகளுக்கு உழைப்பவர்கள் யாரும் கிடைக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வினர் ஆன்மீகச் செம்மல்கள், ஆன்மீகவாதிகள். ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரமில்லாமல் இருக்கும். ஜாதிக்கலவரம் மதக்கலவரம் இருக்காது.
எம்.ஜி.ஆர். நடத்தியது ஆன்மீக ஆட்சி. ஜெயலலிதா நடத்தியது ஆன்மீக ஆட்சி. எடப்பாடி நடத்துவது ஆன்மீக ஆட்சி எம்.ஜி.ஆர். படத்தை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். உங்களை நம்பி பிழைப்பவர்கள் அல்ல. நாங்கள் உங்களை வாழ வைப்பவர்கள். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்திற்கு ஆதரவு தாருங்கள். வரப்போகின்ற நகர்மன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள், என பேசினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்.. tamilsudarr.page..