கடையநல்லூரில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்..
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை பேணும் வகையில் விளையாட்டு போட்டிகள் மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன் தலைமை தாங்கினர். பிரபல தங்க நகை கடை உரிமையாளர் அமானுல்லா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் சக்திவேல் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறைப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய டிஎஸ்பி.
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் பல்வேறு உயிர் பலிகள் ஏற்படுகின்றன. பொதுமக்களுக்கு சமூக விரோதிகளால் பாதிப்பு ஏற்படுவது போல் தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் களிடம் நேரிலோ அல்லது செல்போன் மூலமாகவோ தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போலி மதுபான விற்பனை மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பேசினார். இதில் வெற்றி பெற்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.