திருப்பத்தூரில் மக்களை தேடி பாமக திட்டத்தில் கீழ் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை வழங்கிய பாமக நிர்வாகிகள்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கசிநாயக்கன்பட்டி, குனிச்சி, காக்கங்கரை, சுந்தரம்பள்ளி, லக்கநாயக்கன்பட்டி போன்ற பகுதியில் மக்களை தேடி பாமக என்ற திட்டத்தின் அடிப்படையில் துண்டறிக்கை விநியோகம் செய்யும் நிகழ்வு ஒன்றிய செயலாளர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் டி.கே. ராஜா மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் அக்னி விஜயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பாமகவின் செயல் திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கையை வழங்கினார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய மாநில இளைஞரணி துணை செயலாளர் அக்னி விஜயகுமார்.
தமிழகத்தில் தூய்மையான குடிநீர், தரமான தார் சாலைகள், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதாரம் மற்றும் மருத்துவம், அனைவருக்கும் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளின் நன்மைக்காக 2 லட்சம் வைப்புநிதி, விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பம், தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க தனி பட்ஜெட் போன்ற திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கையை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகிறோம். தற்பொழுது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த மாதம் நடைபெற்ற ஊரக வளர்ச்சி தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் இந்த கூட்டணி சிறப்பான கூட்டணி என மக்கள் மத்தியில் நற்பெயர் பெறும். வட தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் போன்ற வடமாவட்டங்களில் மீண்டும் அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி இடத்தின் மூலப்பத்திரம் வெளியிடாமல் நாங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறோம் என்று தற்பொழுது கூறியுள்ள செயல் அரசியலில் வடிகட்டிய பொய்யாகும். மூல பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்துக்கள் என்ன ஆயிற்று அவர் எப்பொழுது பதவி விலகுவார் என தமிழக மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பாரத்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என பேசினார்.
இதில் ஒன்றிய தலைவர் அன்பழகன், ஒன்றிய துணை செயலாளர் திருப்பதி, துணை தலைவர் பாலமுருகன், முன்னாள் துணை தலைவர் முனிசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜயகுமார், இளைஞரணி நிர்வாகி வேலாயுதம் உட்பட பாமகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
tamilsudarr.page..
செய்தி ஆக்கம்- கோவி.சரவணன்..