வாணியம்பாடியில்  குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜகவின் பேரணியில் கலந்து கொண்ட இஸ்லாமிய  நபர். 

வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜகவின் பேரணியில் கலந்து கொண்ட இஸ்லாமிய  நபர். 


மத்திய அரசு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் இஸ்லாமிய மக்கள்  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் கடந்த 20ஆம் தேதி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து  கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில்  தொடங்கப்பட்ட இருசக்கர வாகனப் பேரணி கோவை சேலம் ஈரோடு கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை வழியாக பேரணியாக வந்தனர்.  இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்த பேரணி குழுவினருக்கு மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து  நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி,  ஆம்பூர், மாதனூர் வழியாக  வேலூருக்கு சென்றது. இந்த பேரணியில் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்  மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் இஸ்லாமிய நபர் ஒருவர்  குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு இஸ்லாமியர்களை அழிக்கும் நோக்கில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவதாக எதிர் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மத்திய பாஜக எதிராக பல்வேறு  குற்றச்சாட்டு வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


tamilsudarr.page.


செய்தி- கோவி‌.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image