திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு திருநங்கை ரியா வெற்றி குவியும் பாராட்டுக்கள்.
தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றுவருகிறது. திமுக கூட்டணியும் மற்றும் அதிமுக கூட்டணியும் பெருவாரியான பகுதிகளில் வெற்றி பெற்றுவருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டுக்கு போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி உள்ளார். அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரபலங்கள் உட்பட பலரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் திருநங்கை ரியா ...