சிதம்பரம் அருகே திருமண ஆகாது இளைஞர்கள் கொண்டாடும் கன்னி திருவிழா..
விழுப்புரம் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி-முட்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் காணும் பொங்கல் அன்று முதல் 10 நாட்கள் கன்னித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காணும் பொங்கலன்று களிமண்ணால் உருவாக்கப்பட்ட கன்னி சிலைகளை வீதிகளில் வைத்து வழிபடுவார்கள் அதன் பிறகு 10-ம் நாள் அந்த சிலைகளை தலையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று சி-முட்லூர் வெள்ளாற்றில் கரைப்பது வழக்கம் அவ்வாறு சிலைகளை வழிபட்டு தண்ணீர் கரைக்கப்பவர்களுக்கு ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான கன்னி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி திருமணமாகாத இளைஞர்கள் இளம்பெண்கள் கன்னி சிலைகளை வீதிகளில் வைத்து வழிபட்டனர் 10-ம் நாளான நேற்று வழிபாடு நடத்தப்பட்ட சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம் பெண்கள் தலையில் சுமந்தபடி மேளதாளம் முழங்க சிலம்பாட்டம், கோலாட்டம், ஆடியபடி முக்கிய சாலைகளில் வழியாக ஊர்வலமாக வெள்ளாற்றுக்கு சென்றடைந்தனர் அதன்பிறகு கன்னி சிலைகள் அனைத்தும் வெள்ளாற்றில் கரைக்கப்பட்டன இதில் சி- முட்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் விழாவையொட்டி சிதம்பரம் புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது விழாவுக்கு கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.