இந்திய எல்லையில் துப்பாக்கி சண்டை பயங்கரவாதி ஒருவன் பலி
...
ஜம்மு காஷ்மீர் :
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் இன்று துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். எல்லை பாதுகாப்பு படையினரை மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை நோக்கி இந்திய வீரர்கள் சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகளும் திரும்ப சுட்டனர் இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவனிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. தற்போது கொல்லப்பட்டுள்ள இந்த பயங்கரவாதி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வால் அவந்திபோரா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .