ஆம்பூரில்  சூப்பர் நேஷன் பார்ட்டி  சார்பாக  குடியரசு தின விழா கொண்டாட்டம்.‌

ஆம்பூரில்  சூப்பர் நேஷன் பார்ட்டி  சார்பாக  குடியரசு தின விழா கொண்டாட்டம்.‌


இந்தியா  விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில்   சூப்பர் நேஷன் பார்ட்டியின்   தலைமை  அலுவலகத்தில் இந்தியாவின்    71 வது குடியரசு தின விழா அதன் நிறுவனத் தலைவர் மதார் கலீல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  காலை 8 மணியளவில்   தேசிய கொடியை ஏற்றி வைத்து  கட்சி நிர்வாகிகளுக்கும்  மற்றும் பொதுமக்களுக்கும்  இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி.சரவணன்- அரவிந்த் ஆம்பூர்- வாணியம்பாடி..


 


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image