ஈரோடு அருகே சொகுசு காரை துரத்திய காட்டு யானை தீக் தீக் நொடிகள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கோவை செல்வதற்காக ஒரு சொகுசு காரில் 5 க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆசனூர் அருகே வனச்சாலையில் கார் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு காட்டு யானை சாலையின் நடுவே தீடீரென வந்து காரை துரத்தியது. இதைக்கண்ட கார் ஓட்டுநர் காரை பின்னோக்கி நகர்த்தினார். இருப்பினும் யானை விடாமல் துரத்தி வந்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்ததோடு மட்டும் இல்லாமல் காரின் அருகே நின்றுகொண்டு காரிலிருந்தவர்களை தாக்க விரைந்து வருவதை அறிந்த சக வாகன ஓட்டிகள் யானையை துரத்திவிட்டு காரில் இருந்தவர்களை மீட்டனர். வனப்பகுதியில் யானையிடம் சிக்கியவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.