சைக்கிள் பயணத்தை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்   ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு.

சைக்கிள் பயணத்தை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்   ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு.


சென்னையிலிருந்து தொடர் 600 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தில் வேலூர் அணைக்கட்டு ஒடுக்கத்தூர் ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி வழியாக வந்த ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உடன் வந்த  80 சைக்கிள் வீரர்களை வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வரவேற்றனர்‌.


பின்பு செய்தியாளர்களை சந்தித்த தொடர் சைக்கிள் பயணக்குழுவின் கேப்டன் சுந்தர்.


இந்த சைக்கிள் பயணம்  காலை சென்னையில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக தொடர்ந்து 600 கிலோமீட்டர் சென்னைக்கு திரும்பும் தொடர் சைக்கிள் பயணம் எனவும் இதில் 80 வீரர்கள் பங்கேற்று உள்ளதாகவும் இதற்கு முன்னதாக இதில் 100 கிலோ மீட்டர் மற்றும் 200 கிலோ மீட்டர் தொடர் பயணங்களில் ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்று உள்ளதாகவும் தற்போது இது 400 கிலோமீட்டர் தொடர் சைக்கிள் பயணம் எனவும் இதற்குப் பிறகு 600 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்திலும் சைலேந்திரபாபு பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தொடர் பயணங்கள் முடிக்கப்பட்ட பின்னர் இதில் பங்கேற்ற சைக்கிள் வீரர்களுக்கு இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்த பொழுது இளைஞர்கள் இந்த சைக்கிள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் எனவும் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டி இடம் பெற்றுள்ளதால் இளைஞர்கள் ஆர்வத்தோடு இப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பின்பு தொடர் பயணத்தை மேற்கொண்ட சைலேந்திரபாபு இன்று  காலை 6 மணிக்கு தொடர்ந்து 27 மணி நேர சைக்கிள் பயணத்தை சென்னையில் முடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image