அமைச்சர் விஜயபாஸ்கரின்  உதவியாளர், ஓட்டுனர்  சாலை விபத்தில் பலி போலீசார் விசாரணை.

அமைச்சர் விஜயபாஸ்கரின்  உதவியாளர், ஓட்டுனர்  சாலை விபத்தில் பலி போலீசார் விசாரணை.


புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ்(எ)வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியற்றி  வந்தார். மேலும்  அதிமுகவில்  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற  மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்றுகொண்டிருந்த பவ்(எ) வெங்கடேசன் அப்போது  கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென  எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த  புளியமரத்தில் வேகமாக  மோதி விபத்துக்குள்ளானது, இதில் அமைச்சரின் தனி உதவியாளர் பவ்(எ) வெங்கடேசன் மற்றும்  காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38)  இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனையடுத்து அருகில்  இருந்த பொதுமக்கள்  விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் செல்வம்  இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவ்(எ)வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வம் என்பவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை விபத்தில் அமைச்சரின் உதவியாளர் பலியான சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image