குண்டு மழையிலும்  அசால்ட்டாக போகும் அதிநவீன  கார்  அம்பானியின் வீட்டு வாசலில்..

குண்டு மழையிலும்  அசால்ட்டாக போகும் அதிநவீன  கார்  அம்பானியின் வீட்டு வாசலில்..


உலகின் மிகப்பெரிய பணக்கார்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, கார்கள் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்கின்றார். இதற்கு இவரின் கார்கள் நிறுத்துமிடமே (கேராஜ்) முக்கிய சான்று. இவரின் மும்பை இல்லத்தில் கார்களை நிறுத்துவதற்கென தனி தளங்களே நிறுவப்பட்டுள்ளன. இதுபோன்ற பல காரணங்களினாலயே இந்தியாவின் விலையுயர்ந்த ஆடம்பர கார்களுக்கு பெயர் போனவராக  முகேஷ் அம்பானி  திகழ்ந்து வருகிறார்.  குறிப்பாக இவரிடத்தில் இருக்கும் பல்வேறு கார்கள் இதுவரை இந்தியர்கள் காணாத அளவிலான பிரம்மிப்பையும், சொகுசு வசதிகளையும் கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக அதிக விலையிலும் அனைவரையும் வாயை பிளக்க வைக்கின்ற வகையிலான கார்கள் முகேஷ் அம்பானி வீட்டு வாசலில் வரிசையில் நிற்கின்றன. அந்தவகையில் தற்போது  ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன், டெஸ்லா மாடல் எஸ் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மிக மிக விலையுயர்ந்த கார்கள் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில்.  2020ம் ஆண்டில் அம்பானியின் கான்வாயில் புதிதாக ஓர் கார் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8-செரீஸ் காராகும். புதிய வரவாக காட்சியளிக்கும் இந்த கார் தற்போது அவரிடத்தில் இருக்கும் மற்ற கார்களை விட அதிக விலைக் கொண்ட மாடலாக காட்சியளிக்கின்றது. அவரது மகன்  ஆகாஷ் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு கடந்த வருடமே வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், இந்த கார் தற்போதே மும்பையின் சாலைகளில் காட்சியளிக்க தொடங்கியுள்ளது. இந்த கார் காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவில் ரூ. 13.5 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த விலையானது எந்தவொரு கஸ்டமைசேஷனும் செய்யப்படாதநிலையில் கிடைக்கக் கூடிய ஓர் விலையாகும். ஆனால், தற்போது காட்சியளித்திருக்கும் காரில் முகேஷ் அம்பானி எத்தகைய மாற்றங்களைச் செய்துள்ளார் என்பது குறித்து இதுவரையிலும் எந்த   தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், அதன் விலை ரூ. 13.5 கோடிக்கும் அதிகமான விலையில் இருக்கும் என்பது உறுதி. ஆகையால், தற்போது அவரிடத்தில் மற்ற கார்களைவிட இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் கார் மிக மிக விலைக் கொண்ட காராக காட்சியளிக்கின்றது. ரால்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த காரை 44,000 எக்ஸ்டீரியர் மற்றும் தனி விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து தருகின்றது. முக்கியமாக இந்த காரின் அதீத பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளின் காரணமாக இத்தகைய விலை இந்த காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கார் ப்ரூஃப் தரம் வாய்ந்ததாகும். ஆகையால், இதன்மீது குண்டு மழை பொழிந்தாலும் கூட காருக்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு சிறு கீரல் கூட ஏற்படாது. அந்தளவிற்கு அதிக பாதுகாப்பு நிறைந்த காராக ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த பல்வேறு சொகுசு வசதிகள் காட்சியளிக்கின்றன. தற்போது மும்பையில் வலம் வந்துக்கொண்டிருக்கும் இந்த காரின் புகைப்படத்தை கார் கிரேசி இந்தியா என்ற தளம் வெளியிட்டுள்ளது.இந்த சமீபத்திய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், அந்நிறுவனத்தின் 'சொகுசு கட்டிடக்கலை' என்று அழைக்கப்படும் 'அலுமினிய ஸ்பேஸ்ஃப்ரேம்' என்ற பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் முன்னோடிகளைக் காட்டிலும் இது 30% இலகுவானதாகவும், மிகப் பெரிய உருவம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றவற்றைக்காட்டிலும் இது 77 மிமீ குறைவானது. இதன், உயரம் 8 மிமீட்டராகவும், அகலம் 29 மிமீ உள்ளது. இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் காரை பிரிமியம் மற்றும் கவர்ச்சி லுக்கிற்கு கொண்டுவருவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் கவர்ச்சி லுக்கிற்காக 24 ஸ்லாட்டுகளைக் கொண்ட குரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், புதிய எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் புதிய வடிவ உத்வேகம் யாச்செட் (படகு) இடம் பெறப்பட்டுள்ளது. இரண்டு விதமான நிற ஷேட்களில் இந்த கார் கிடைக்கின்றது. மேலும், இரண்டடுக்குக் கொண்ட சவுண்டு ப்ரூஃப் கண்ணாடிகள் இதன் ஜன்னல் மற்றும் விண்ட் ஸ்கிரீன்களில் பொருத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 செரீஸ் கார்களில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதன் 8-ஸ்பீடு சேட்டலைட் அட்டாச்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை 5.4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் அதீத திறனைக் கொண்டதாக இருக்கின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிகம் வரவேற்பைப் பெறும் கார்களில் ஒன்றாக உள்ள இந்த பாந்தம் தற்போது நான்கு வருட வாரண்டியில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இத்துடன், 24 மணி நேர ரோட் அசிஸ்டண்ட் சப்போர்ட்டும் வழங்கப்படுகின்றது. எது எப்படியோ இனி இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கை இந்த சொகுசு கார் மூலம் தெரியவந்துள்ளது...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image