குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் போராட்டம்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக இன்று காலை கர்நாடக மாநிலம் கோலரில் போலீஸ் அனுமதியின்றி பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தினர் காவல் துறையினர் .இந்த நிகழ்வால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போர்க்களம் போல காட்சி அளித்தது.