அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்..





அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்

 

 

 புதுக்கோட்டையில் தனியார்

ஹோட்டல் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநில செயல் தலைவர்  இளமுருகு  முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

இயக்கத் தலைவராக வை.ராமலிங்கம் நியமனம் உடன் டாக்டர்மகா.ராமகிருஷ்ணன்.

சிவா.முருகேசன்  தலைவர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 டாக்டர் வை பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் 43 ஆண்டுகளாக இயங்கிவருவதும் தென்னிந்தியாவின் முதல் முழு ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கமுமான அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டையில்  300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தமிழகத்தின் 37 மாவட்ட நிர்வாகிகள், புதுச்சேரி மாநிலத் தலைவர்கள், இயக்கத்தின் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

 

முன்னதாக, இயக்கத்தின் செயல்தலைவர் வை. ராமலிங்கம் தலைமையில் பழைய பேருந்து நிலைய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் ஆறாம் நாள் இயற்கையெய்திய டாக்டர் வை. பாலசுந்தரம் அவர்களுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டது. பொதுச்செயலாளர் டாக்டர் மகா இராமகிருஷ்ணன் வரவேற்றுப்பேசினார். அதன்பின் மூத்த தலைவர்கள் கருத்துரையாற்றினார்கள். செயல்தலைவர் வை. ராமலிங்கம் இயக்கத்தின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். இளமுருகு முத்து இயக்கத்தின் செயல் தலைவராகவும் சிவ. முருகேசன் மாநில அமைப்புச்செயலாளராகவும் வை.ரா. பிரசன்னகுமார்  சென்னை மாநகர் மாவட்டத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image