இளம்பெண்ணை கடத்தி வைத்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் வலை ...

 







இளம்பெண்ணை கடத்தி வைத்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகள் சாந்தி(20). பெயர் மாற்றம் செய்யப்பட்டது) இவர் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர் இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது அதன் பிறகு பக்கத்து கிராமமான சிலட்டூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தற்போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வீட்டு பக்கம் அடிக்கடி வந்து செல்வதால் அவரது சகோதரர் முருகனுக்கு சுரேஷின் மீது சந்தேகம் வர அவர் இல்லாத போது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது தன் தங்கையை அண்ணனுக்கு வாயில் துணி கட்டியபடி கிடந்துள்ளார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களாக கடத்தி வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சுரேஷ் காவல்துறையினர் s363 ,342,376(ii)Ipc ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் கேட்டபோது பதில் கூறு மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








 

Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image