ஆம்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசுபள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்தில் உள்ள 15 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 50 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் வழங்கும் விழா ஆம்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களை விட திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகம் எல்லா முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதற்காக சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நல்ல ஆதரவு வழங்க வேண்டும், குறிப்பாக சமூக நல அமைப்புகள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதற்கு உதவ முன்வரவேண்டும், இன்று ரோட்டரி சங்கம் சார்பில் 1,50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை வழங்கி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் இனியும் உங்கள் சேவை மாவட்டம் முழுவதும் தொடர வேண்டும் என கூறினார். இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் குணசேகரன், வாசுதேவன், கைலாஷ் குமார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.