அரூர் பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காவல்துறை.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் உள்ள தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த மேலாளர்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் பேசியது :
திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் தரமான செட்டர்கள், பூட்டுகளை பயன்படுத்த வேண்டும். மின்சார இல்லாத நேரத்தில் எச்சரிக்கை மணிகள் ஒலிக்கும் வகையில் யுபிஎஸ் கருவிகள் பொருத்த வேண்டும். வங்கிகளின் வளாகத்தில் நான்கு திசைகளிலும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். வங்கிகளில் இரவு பாதுகாவலர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். பாதுகாப்பான, உறுதியான பாதுகாப்பு பெட்டகங்களில் பணம் மற்றும் தங்க நகைகளை வைக்க வேண்டும். வங்கிகளில் திருட்டு சம்பவம் நேரிட்டால் அது குறித்து வங்கி மேலாளர், உதவி மேலாளர், காசாளர் ஆகியோரின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகள் வரும் வகையில் இணைப்புகள் வைத்திருக்க வேண்டும் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் ரவி, பி.கே.பவுலோஸ், ஜெய்சல்குமார், மனோகரன், மஞ்சுளா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ஆனந்தன், பழனிசாமி, தலைமைக் காவலர் பழனி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100}க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டனர்.