வெம்பகோட்டை அடுத்த எதிர்கோட்டையில் கால்நடை மருத்துவமனை மற்றும் துணை நிலையத்தை சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் திறந்து வைத்தார்.

 


வெம்பகோட்டை அருகே உள்ள எதிர்கோட்டையில் கால்நடை மருத்துவமனை துணை நிலையத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் திறந்து வைத்தார்.


விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அடுத்த  எதிர்கோட்டை பகுதி பொதுமக்களின் நீண்ட கோரிக்கை ஏற்று தமிழக அரசு சார்பில் புதிய   கால்நடை மருத்துவமனை மற்றும்  துணை நிலையம் கட்டும் பணி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கலந்து கொண்டு மருத்துவமனை மற்றும் துணை நிலையத்தை   திறந்து வைத்து விழா சிறப்புரை ஆற்றினார்.


அப்போது பேசிய ராஜாவர்மன்,


நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் போட்டியிட்ட அதிமுக 20 கவுன்சிலர்களையும் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி. குடிநீர், வாறுகால் வசதி, தெருவிளக்கு உள்பட அனைத்து தேவைகள் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக வெம்பக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படும் . அதன் மூலம் கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும்.  இரவு பகல் பாராமல் கவுன்சிலர்கள் உழைக்க தயாராகி உள்ளனர்.  அரசுக்கும் மக்களுக்கும் பலமாக அதிமுக கவுன்சிலர்கள் இருப்பவர்கள் என்று  பேசினார்


இதில்  கால்நடைத்துறை  இணை இயக்குனர் அருணாசலகனி, வெம்பகோட்டை யூனியன் சேர்மன் பஞ்சவர்ணம் , துணை சேர்மன் ராமராஜ்பாண்டியன், வெம்பகோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பாஸ்கர சேதுபதி, அடைக்கலம், அழகர்சாமி ,பல்க் முனியசாமி எட்டக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image