உள்ளாட்சி பதவியில் இறங்கி அடித்த அதிமுக. கலங்கிய திமுக.வென்றது எடப்பாடியின் வியூகம்..
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட, ஒன்றிய குழுத்தலைவர்களின் மறைமுகத் தேர்தலில் வெற்றிக்கொடி கிடைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வியூகமே காரணம் என்று அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
27 மாவட்டங்களில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. திமுகவினர் கொஞ்சமும் இதை எதிர்பார்க்கவில்லை. மொத்தம் 27 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக 14ஐ அள்ளி காட்டி திமுகவை அலற வைத்திருக்கிறது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சனை காரணமாக இன்னும் நடத்தப்படவில்லை. அதேபோல, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் மொத்தமுள்ள 314ல் அதிமுக கூட்டணி 151ஐ அள்ளியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கம் என்று அக்கட்சியின் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், திமுகவுக்கு கிடைத்திருப்பது 130 மட்டும் தான். வரப்போகும் அடுத்த முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது.
தஞ்சசை, தேனி, கரூர் என பெரும்பாலான பகுதிகளில் அதிமுக தான் ஜெயித்திருக்கிறது. திமுகவின் முயற்சிகளுக்கு பலன் ஏதும் இல்லை. கடும் போட்டி இருந்தும் பதவிகளை விடக்கூடாது என்ற எடப்பாடியின் அதிரடியே பெருவாரியான வெற்றிகளை பெற காரணம் என்றும் அதிமுகவினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது. அதன்பிறகு ஆட்சி முடிந்துவிடும். இந்த ஓராணடில் மக்களிடம் இருக்கும் அதிருப்தியை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒரு வருடத்தில் உள்ளாட்சி பதவிகளில் அதிமுகவினர் அதிகஅளவு இருந்தால் அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கான கணக்கீடுகள் சரியாக இருக்கும். அதற்குள் மாவட்டவாரியாக கிராம பகுதிகள் வாரியாக எழுந்திருக்கும் அதிருப்தியை சமாளித்து, மக்களை குளிர்விக்க முடியும் என்று கணக்கு போடுகிறது. அதற்கேற்ப எப்பாடுபட்டாலும் பதவிகளை எதிர்க்கட்சிக்கு விட்டுவிடக் கூடாது. அம்மாவின் அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது, அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள் என்று மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளிடமும் நேரடியாகவே அண்ணன் எடப்பாடி பேசினார். அதன்பலன் தான் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை அதிமுக பெற்றிருக்கிறது என்று அக்கட்சியில் நடப்பவற்றை உற்று நோக்கி வரும் ரத்தத்தின் ரத்தங்கள் கூறியுள்ளனர். ஆக மொத்தம்… இனி அடுத்த இலக்கு என்பது சட்டசபை தேர்தல்… அதிலும் ஜெயம் தான் இப்போது ஆரவாரம் செய்கின்றனர் அதிமுகவினர்.