கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டுதான் உங்களிடம் வந்துள்ளோம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி..
புரட்சித்தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றது .விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிவகாசி, திருச்சுழி, நரிக்குடி, வத்திராயிருப்பு உட்பட மாவட்டம் முழுவதிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகின்றது. விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா தலைமை வைத்தார் . சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, தலைமை கழக பேச்சாளர் முத்துசாமி, கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி , வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்தையா, நகரக் கழகச் செயலாளர் இன்பத்தமிழன், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொன்னு பாண்டியன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது, தமிழகம் முழுவதிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிமுக தொண்டர்கள் இயன்ற அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதிமுக அரசின் செயல்பாடுகளை சிறப்புகளை எடுத்து சொல்லும் விதமாகவும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாகவும் தமிழகம் முழுவதிலும் அதிமுக சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. விரைவில் நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு நீங்கள் வாக்குகளை அள்ளி கொடுத்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிட்டாமிராசு தாரர்களுக்கு இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை. கிழிந்த சட்டையையும் ஒட்டிய வயிறையும் பார்த்து ஆரம்பித்த கட்சி தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். பாட்டாளிகள், படைப்பாளிகள், நெசவாளிகள் வாழ்க்கைத்திறன் முன்னேற்றத்திற்காக இந்தக் கட்சியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கமே ஆகும் .இது மனிதர் ஆரம்பித்த கட்சி அல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி. இந்த கட்சியில் மனிதாபிமானம் உள்ளவர்கள் மட்டுமே இருப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு உதவும் என்ன கூடியவர்கள் மட்டுமே இந்த கட்சியில் இருப்பார்கள். இன்றும் எம்ஜிஆர் இளைஞர் ஆகத்தான் அவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். எம்ஜிஆரின் ஒவ்வொரு பாடல்களும் வாழ்க்கை முறையை எடுத்துக் கூறும் விதமாக இருக்கும். இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். எல்லா கிராமத்திலும் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அண்ணா திமுக பிறருக்கு உதவி செய்து அதன் மூலம் சந்தோஷப்படும் என்ற இயக்கம். சாதாரணமாக ஒரு டீக்கடையில் உட்கார்ந்து அண்ணா திமுக வேட்டி கட்டிய தொண்டர் ஒருவன் டீ குடித்தான் என்றால் பத்து பேருக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு தான் டீ சாப்பிடுவான். பிறருக்கு கேட்டு வாங்கி கொடுப்பவர்களாக தான் அதிமுக தொண்டர்கள் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவாக இருந்தாலும் துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிதான் முதல் ஆளாக நிற்பான். ஒவ்வொரு ஊருக்கும் முக்கிய தலைவராக இருப்பவர்கள் நல்லவராக இருப்பவர்கள் அது அண்ணா திமுக தொண்டர்கள் இருப்பார்கள். நாங்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்து கொடுத்துவிட்டு தான் உங்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றோம். நான் அமைச்சராக இருக்கிறேன் சட்டமன்ற உறுப்பினராக சந்திரபிரபா உள்ளார். எனவே இந்த பகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் இன்னும் கொண்டுவரப்படும். அழகாபுரி ரோடு, கான்சாபுரம் ரோடு, இப்படி இந்தப் சுற்றுப்பகுதி எல்லா சாலைகளும் தரமான சாலைகளை அமைத்துக் கொடுத்து உள்ளோம். ஏராளமான பகுதிகளில் புதிய பாலங்கள் நாங்கள் அமைத்துக் கொடுத்து உள்ளோம். இப்படி நாங்கள் செய்த திட்டங்களை சொல்லிக்கொண்டு வாக்கு கேட்கின்றோம். எனவே வாக்காளர்கள் அண்ணா திமுக சார்பாக நிற்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இது மாபெரும் இயக்கம் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தவர்கள் அழிந்து தான் போவார்கள். முதியோர் விதவை பென்ஷன், தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டம், இலவச பட்டா உட்பட பல்வேறு திட்டங்களை எங்களால் மட்டுமே கொடுக்க . எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாங்கள் உங்களுக்கு செய்து வருகின்றோம். எங்களுக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எங்களது அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். தொடர்ந்து உங்களுக்காக நாங்கள் மக்கள் பணியாற்றுவோம். மக்களுக்காக உழைக்க கூடியவர்கள் நாங்கள். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வத்ராயிருப்பு பகுதியை தனி தாலுகாவாக நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். வத்ராயிருப்பு பகுதியை தனித் தனி தாலுகாவாக பிரிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறினர். நாங்கள் தமிழக முதல்வரிடம் நேரடியாகச் சென்று தொகுதி மக்களின் கோரிக்கையை கூறி வத்திராயிருப்பு பகுதியை தனி தாலுகாவாக வாங்கி கொடுத்துள்ளோம். விரைவில் வத்திராயிருப்பு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. வத்ராயிருப்பு பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சான்றிதழ் வாங்க நலத்திட்ட உதவிகள் வாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு செல்ல வேண்டியது தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுத்துள்ளோம். நீங்கள் எங்களுக்கு எங்களது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். சொன்னதை செய்யும் ஆட்சி புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் ஆட்சியாகும். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எந்த முயற்சியும் செய்து நிறைவேற்றிக் கொடுப்போம். தேவைப்பட்டால் சாலையில் அமர்ந்து கூட மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். நாங்கள் கரத்தை நீட்டி உள்ளோம் நீங்கள் சில நேரங்களில் தட்டிவிட்டு இருக்கலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. மீண்டும் உங்களுக்காக உழைத்து உங்கள் ஆதரவை பெற முயற்சித்துக் கொண்டுதான் இருப்போம். உங்களுக்காக உழைத்து கொண்டேதான் இருப்போம். எங்கள் கரத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்கும் வரை நாங்கள் உங்களுக்காக உழைத்துக் கொண்டேதான் இருப்போம் . நீங்கள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்களோ அதை நாங்கள் செயல்படுத்தி காண்பிப்போம். வத்திராயிருப்பு, கொடிக்குளம், கூமாப்பட்டி பல்வேறு பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை நீங்கள் எண்ணிப் பாருங்கள். எத்தனை கிராமங்களில் மேல்நிலை தொட்டிகள், எத்தனை கிராமங்களில் மின் விளக்குகளும், எத்தனை கிராமங்களில் சாலை வசதிகள், எத்தனை கிராமங்களில் எவ்வளவோ திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், செயல்படுத்தி உள்ளோம். ஆகையால் நாங்கள் தைரியமாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளோம். சீவலப்பேரி குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பல்வேறு திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்கியுள்ளோம். வத்திராயிருப்பு பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் கொடுத்து வருகின்றோம். வத்ராப் பகுதி மக்களுக்கு சுவையான மூலிகை தண்ணீரை தாமிரபரணி தண்ணீரை கொடுத்த கட்சி அதிமுக கட்சி. இது யாராலும் மறுக்க முடியுமா. தாமிரபரணி தண்ணீரை எப்படி கொண்டு வருவார்கள் என்று அப்போது கேலி செய்தார்கள். நாங்கள் கூறியபடி இப்போது தமிரபரணி தண்ணீரை உங்களிடம் சேர்த்துள்ளோம். வரும் பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தாருங்கள். நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்திருக்கின்றோம் என்று பேசினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி கனகராஜ் ,வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முத்தையா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பேச்சியம்மாள் ஒன்றிய கழக அவைத்தலைவர் பிச்சைக்கனி மாவட்ட மீனவர் அணி பொருளாளர் அய்யனார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ராஜா மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பெரியசாமி மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் தங்க முனியசாமி மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கனகராஜ் கூட்டுறவு சங்க தலைவர் கனகராஜ், பாலசுப்பிரமணியன் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் நெல்லையப்பன் முன்னாள் பேரூர் கழக செயலாளர் ராமச்சந்திரன் பேரூர் கழக பிரதிநிதிகள் கௌதமி ஜெகதீசன் முத்துராஜ் ம்ஜிஆர் மன்ற தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், எம் ஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.