கிருஷ்ணகிரி அருகே உள்ளாட்சி தேர்தலில் கல்லுாரி மாணவி வெற்றி.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையை சேர்த்து மொத்தம் 10 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
91,975 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
தமிழகம் முழுவதிலும் உள்ள 315 மையங்களில் இந்த வாக்குப்பெட்டிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என். தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான போட்டியில் சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயதே ஆன கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.