திருச்சியில் 900 கோடி பொதுமக்களின் முதலீட்டுத் தொகையை சுவாகா செய்த தனியார் நிதி நிறுவனம்.
மீண்டும் ஒரு எம்.எல்.எம் கும்பலிடம் பணத்தை இழந்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் மத்திய பகுதியான தில்லைநகர் 4 வது குறுக்கு சாலையில் செந்தூர் பின்கார்ப் என்ற தனியார் நிதி நிறுவனம் இரண்டு வருடமாக செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக திருச்சி அருகே கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம், பத்மா தம்பதி நடத்தி வந்தனர்.திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் என
4இடங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஒரு வாடிக்கையாளர் ஒரு லட்சத்தி 5ஆயிரம் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு ரூ. 900 வீதம் 20 நாட்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என கூறி வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக
ரூ9.35 லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் பங்கு தரப்படும் என கூறி வாடிக்காளர்களை ஏமாற்றி உள்ளனர்.
இந்நிறுவனத்தில் சுமார் 45,000 ஆயிரம் வாடிக்கையாளர்கள்
ரூ900 கோடி பணத்தை முதலீடு தொகையாக செய்துள்ளனர்.
கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் மோசடி தம்பதிகளான முத்துராமலிங்கம், பத்மா என குற்றம்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் மற்றும் முதலீட்டு தொகையை தராமல் ஏமாற்றி வருவதுடன், நிறுவனத்தையும் மூடி விட்டனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் காலம் தாழ்த்துகின்றனர் என கூறினர்.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி, கரூர், திருவாரூர், சென்னை, திண்டுக்கல், கோயமுத்தூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
150கும் மேற்பட்டோர் வந்து சமயபுரம் அருகே நெ1 டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலீட்டு பணத்தை எப்படி திரும்ப பெறுவது, அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
எங்களை பணத்தை முதலீடு செய்யவைத்து செந்தூர் பின்கார்ப் நிறுவனம் பணத்தை தரமால் ஏமாற்றி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டது. எங்களுக்கு நாங்கள் முதலீடு செய்த பணத்தை நிறுவனம் திருப்பித்தர வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றினைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.