மதுரை- உசிலம்பட்டி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி தென் மண்டல ஆணையர் ஆய்வு..
மதுரை - உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 37 கிலோ மீட்டர் தூரம் உள்ள புதிய அகல ரயில் பாதையில் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் திரு. கே. எ. மனோகரன், இன்று (23.01.2020) மோட்டார் டிராலி மூலம் பாதுகாப்பு சோதனைகள் செய்து வருகிறார். நாளையும் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று மாலையில் ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பின்பு அவர் ரயில் பாதைக்கான பாதுகாப்பு சான்றிதழ் அளித்த பிறகு ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் திரு. வி. ஆர். லெனின், முதன்மை நிர்வாக அதிகாரி திரு. எ.கே. சின்கா, முதன்மை சமிக்ஞை பொறியாளர் திரு. வெங்கடாசலம் ஆகியோர் பங்கு பெற்றனர்.