திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்! கொலையா!தற்கொலையா என  போலீசார் விசாரணை..

திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்! கொலையா!தற்கொலையா என  போலீசார் விசாரணை..


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியைச் சார்ந்த செல்லதுரை மகன்  மோகன்(24) திருப்பத்தூரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமான  டிவி விற்பனை செய்யும்  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.



இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல  பணிக்கு செல்வதாக வீட்டில்  கூறிவிட்டு வந்த   மோகன் தாமலேரிமுத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த நபர் 
கொலை செய்யப்பட்டாரா  அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு வந்த வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image