அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் மூன்று மாதத்தில் துவக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா.
லக்னோ.
அயோத்தியில் விண்ணைத் தொடும் அளவிற்கு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இன்னும் 3 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தினாலும், இந்த சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெறாது. எவருடைய குடியுரிமையையும் பறிக்க இந்த சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொய் பரப்புரையை மேற்கொள்கின்றனர். இந்த சட்டம் பற்றி எதிர்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பொதுவெளியில் விவாதம் நடத்த தயாரா..?
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது 23 சதவீதம் பேரை கொண்டிருந்த சிறுபான்மையினர், தற்போது வெறும் 3 சதவீதமாக உள்ளனர். ஒன்று அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். அப்படி வந்தவர்களுக்கு பிரதமர் மோடி வீடுகளை வழங்கியதுடன், வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்து கொடுத்திருக்கிறார். இது தவறா..?
அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணிகளை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் 3 மாதங்களுக்குள் தொடங்கப்படும், என உறுதியளித்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..Tamilsudarr.page