ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் அம்மா பேரவை சார்பில் தீர்மானம்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகமான
ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று 2 கோடி தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அம்மா பேரவையின் மாநில செயலாளரும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசணைகளை வழங்கி பேசுகையில்.
இன்று தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழியில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலில் அதிமுக மாபெரும் இயக்கம் தொடர்ந்து அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருவதற்கு கடந்த மாதம் மத்திய அரசால் இந்திய அளவில் சிறந்த நிர்வாகத் திறமைக்காக முதல் பரிசு வழங்கப்பட்டது. இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்துவரும் அம்மாவின் அரசு அவரின் 72-வது பிறந்தநாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்படும். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும், அன்னதானம், கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தான தர்ம நிகழ்ச்சிகள் செய்யப்படும் என பல்வேறு தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயற்றப்பட்டன. நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதன், உள்ளாட்சித் துறை அமைச்சர், எஸ் பி வேலுமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.