வேலூரில் 71 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் கோடை அருகிலுள்ள நேதாஜி விளையாட்டரங்கில் 71-வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக வேலூர் கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் நடைபெற்ற காவலர்கள் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்.மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் வெண்புறாக்களை பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி- கோவி. சரவணன்...