வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் 71 வது குடியரசு தின விழா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநிலத் தலைவரும் பிரபலமான வழக்கறிஞருமான அஸ்லாம் பாஷா இந்திய தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்திய தேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் சாசன முகப்புரை வாசித்து உறுதிமொழியை ஏற்று குடியரசு தின விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தி- கோவி.சரவணன்- அரவிந்த். வாணியம்பாடி..