கரூர் வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 71ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்..
கரூர் வெங்கமேடு A1திரையரங்கம் எதிரே சந்தை அருகே செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 71 ஆவது குடியரசு தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கோகிலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பவர் டெக்ஸ் உரிமையாளர் செல்வராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகள் தேசியக் கொடிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பிறகு பள்ளியின் ஆசிரியர் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடந்த கல்வியாண்டில் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். பின்னர் தலைமையாசிரியர் கோகிலா அவர்கள் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியப் பெருமக்களும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு 71 ஆவது குடியரசு
தினவிழாவை போற்றிக் கொண்டாடினர்.