திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அரசு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அரசு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருப்பத்தூர் மாவட்டம் கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக  உதயமானதை  அடுத்த முதல் முறையாக மாவட்டத்தில்  71 வது குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் காலை 8 மணியளவில்  திருப்பத்தூர் மாவட்ட  ஆயுதப்படை காவலர் மைதானத்தில் தேசிய கொடியை  மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஏற்றி வைத்தார். அதன்பின் காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் 7,01,92,165 ரூபாய் மதிப்புள்ள  அரசின் நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் மற்றும் காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும்  சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை  வழங்கினார்.  இவ்விழாவில்  மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திருப்பத்தூர் சார் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள்  மற்றும்  அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


செய்தி- கோவி.சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image