சபரிமலையில் இருமுடியுடன்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்.

சபரிமலையில் இருமுடியுடன்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்.


தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தீவிர பக்திமான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக  தமிழகத்தில்  ஒரு கோயில் விடாமல் வழிபடுபவர். அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான கோயில் என்றால் அது  கைலாசநாதர் கோயில் ஆகும்.அந்த கோயிலுக்கு  அடிக்கடி சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம்.  அத்துடன் குலதெய்வ வழிபாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  அதுமட்டுமின்றி தனது சொந்த ஊரில் உள்ள பல கோயில்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். எப்போதும் அமைதியான சுபாவத்துடன் காணப்படும் ஓ பன்னீர்செல்வம் அப்படி இருக்க இறை நாட்டமும் ஒரு  காரணம் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தார். அதனையடுத்து  சபரிமலை சென்ற துணை முதல்வருக்கு  சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மேல்சாந்தி சுதீர்நம்பூதிரி  சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னதாக அவரை சபரிமலை தேவஸம் நிர்வாகிகள் வரவேற்றனர்.மளிகைப்புரம்  கோயிலில் தரிசித்த துணைமுதல்வர் சற்று ஓய்வுக்குப்பின் பம்பைக்கு  நடந்துசென்றார்.முன்னதாக பம்பை வந்த அவர் கணபதிகோயிலில் வழிபாடு நடத்தினார். சபரி‌மலை தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தமிழகம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image