புதுக்கோட்டை அருகே மத்திய அரசின் திட்டத்தில் மோசடி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம்.
இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி பெரியசாமி மற்றும் துணைத்தலைவர் சுஜாதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். பொது பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளரும் வந்திருந்தார்.
அப்போது கிராம சபைக் கூட்டம் தொடங்கும்போது இதுவரை ஊராட்சியில் நடைபெற்ற பணிகளின் வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் பொது பார்வையில் வைக்க வேண்டும் என புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது பேசிய ஊராட்சி செயலாளர் பானுமதி அந்த கணக்கு நோட்டுகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பதால் இப்போது கொண்டு வர இயலாது என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவு செலவு கணக்கு நோட்டுகள் இல்லாமல் எப்படி கிராம சபைக் கூட்டம் நடத்த முடியும் எனவே வரவு செலவு நோட்டுகள் வந்தால் மட்டுமே இந்த கூட்டம் நடந்த வேண்டும் என கூறி ஒரு சிலர் ரகலையில் ஈடுபட்டனர். இதுகுறித்து
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் பொதுமக்களின் கோரிக்கை படி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வரவு செலவு கணக்கு நோட்டுகள் கொண்டு வரப்பட்டது. அந்த வரவு செலவு கணக்கில்
மத்திய அரசின் கழிவறைத் திட்டத்தில் பல கிராமங்களில் கழிவறைகள் கட்டப் படாமலயே ஆனால் கழிவறைகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இருந்தது. குறிப்பாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் உள்ளிட்டவை வழங்கி விட்டதாகவும் கணக்குகள் இருந்தன.
அதே போல் குடிநீர்க் குழாய்கள் பதிக்காமலயே பதித்திருப்பதாகவும் அதற்கான வரவு செலவு கணக்குகள் இருந்தன. குறிப்பாக தெரு விளக்குகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது ஆனால் மின் கம்பங்கள் இல்லாத இடங்களில் எல்லாம் மின் விளக்குகள் பொருத்தியதாகக் கணக்குகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அத்தனை திட்டங்களிலும் பொய்யான கணக்குகள் எழுதி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடிகள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிலும் குடிதண்ணீருக்காக பயன்படுத்தும் பிளீச்சிங் பவுடரில் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இப்படி பல திட்டங்களில் மோசடிகள் நடைபெற்று இருப்பதால் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன்பின் தான் கிராம சபை கூட்டம் நடந்த வேண்டும் என பொதுமக்கள் ரகலையில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் பொதுமக்கள் கிராம் சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஊராட்சியில் இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் வரவு செலவு கணக்குகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்.. tamilsudarr.page